சிறிலங்கா அதிபர் முன்பாக பதவியேற்கமாட்டார் விக்னேஸ்வரன்

28.9.13

வடக்கு மாகாண முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள, சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபருக்கு முன்பாக பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொள்ள மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவில் இதுவரை பெரும்பாலான மாகாண முதல்வர்கள் சிறிலங்கா அதிபர் முன்னிலையிலேயே பதவியேற்று வந்துள்ளனர்.

எனினும், மாகாண முதலமைச்சர்கள், சிறிலங்கா அதிபரின் முன்னிலையிலேயே பதவியேற்க வேண்டும் என்ற சட்டரீதியான கட்டாயம் இல்லாத நிலையில், மகிந்த ராஜபக்ச முன்னிலையில், பதவியேற்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று தெரியவருகிறது.

ஏற்கனவே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும், கிழக்கு மாகாண ஆளுனர் முன்பாக பதவியேற்கவில்லை. இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர்கள் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :