டெல்லி கற்பழிப்பு வழக்கு: சர்ச்சையில் சிக்கிய எதிர்தரப்பு வழக்கறிஞர்

14.9.13

டெல்லியில் மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 குற்றவாளிகளின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங், தனது கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஏ.பி.சிங், “என் மகள் தனது ஆண் நண்பருடன் திருமணத்திற்கு முன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு, இரவில் அவருடன் சுற்றித்திரிந்தால், அவளை நான் உயிரோடு எரித்துவிடுவேன். அனைத்து பெற்றோரும் இத்தகைய அணுகுமுறையைத் தான் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

இவ்வாறு அவர் கூறியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, பார் கவுன்சிலுக்கு புகார் அனுப்பியுள்ளது. பார் கவுன்சில் தலைவரும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை பார் கவுன்சில் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

டெல்லி பார் கவுன்சில் செயலாளர் முராரி திவாரி இதுபற்றி கூறுகையில், “வழக்கறிஞர் ஏ.பி.சிங் மீதான எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும்படி கூறியிருக்கிறோம். ஒருவேளை எழுத்துப்பூர்வமாக புகார்கள் வராவிட்டாலும், டெல்லி பார் கவுன்சில் தானாக முன்வந்து, செப்டம்பர் 20-ம் தேதி இது தொடர்பாக விவாதிக்கும்.

 தவறாக பேசிய வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

0 கருத்துக்கள் :