பிரபாகரன் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவார் விக்னேஸ்வரன். உதய கம்மன்பில

27.9.13

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விட்ட இடத்தில் இருந்து, தனி ஈழத்தை அமைப்பதற்கான அரசியல் போராட்டத்தை சி.வி.விக்னேஸ்வரன் தொடங்குவார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச்செயலர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூடடமைப்பு வெற்றி பெற்றுள்ளது குறித்து, கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள, இந்தப் புலிகள் பிரபாகரன் காலத்துப் புலிகளைவிட ஆபத்தானவர்கள். பொல்லாதவர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட அனைவரும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் கீழ் பணியாற்றியவர்கள் தான்.

ஈழப் போராட்டம் தற்போது இராஜதந்திர ரீதியான வழிமுறையாக மாறியுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :