மார்ச் வரை சிறிலங்காவுக்கு காலக்கெடு, இல்லையேல் அனைத்துலக விசாரணை

25.9.13

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சுதந்திரமான - நியாயமான விசாரணைகளை நடத்தத் தவறினால், விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் கடமை அனைத்துலக சமூகத்துக்கு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சற்று முன்னர், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை, பிரதி ஆணையாளர் பிளேவியா பன்சியெரி வாசித்தார்.

இந்த அறிக்கையிலேயே, மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் பதிலளிப்பதற்கு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அவர் காலக்கெடு விதித்துள்ளார்.

“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கவலை கொண்டுள்ள, குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுதந்திரமான நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ள, புதிய அல்லது விரிவான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கண்டறிய முடியவில்லை.

தனிப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது உள்ளிட்ட, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நம்பகமான தேசிய செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு ,தற்போது தொடக்கம், மார்ச் 2014 வரையான காலப்பகுதியை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், தமது சொந்த விசாரணையை மேற்கொள்ளும் கடமை அனைத்துலக சமூகத்துக்கு உள்ளதாக நம்புகிறேன்.
அறிக்கையில் மேலதிக விபரங்கள் விரைவில்.

0 கருத்துக்கள் :