விருப்பு வாக்குகளில் அரியரட்ணம் முன்னணி - ஆனந்தசங்கரி தோல்வி

22.9.13

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  வேட்பாளர்களுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளின் விபரங்களை மாவட்டச் செயலகம்  வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் கீதாஞ்சலியும் தோல்வியடைந்துள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி
1.ப.அரியரட்ணம் - 27,264 வாக்குகள்
2. குருகுலராஜா  - 26,427 வாக்குகள்
3.பசுபதிப்பிள்ளை - 26,132 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1. தவநாதன் - 3,753 வாக்குகள்

0 கருத்துக்கள் :