தமிழ் அரசு கட்சியின் முகபுத்தகத்தில்…

28.9.13

(யாழ் நகரில் திரு விக்னேஸ்வரன் அவர்களை பற்றிய விமர்சனம் குறித்து தமிழ் அரசு கட்சி தனது முகபுத்தகத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளது )

அன்பான மக்களே !
வெளியில் இருந்து கொண்டு வடமாகாண சபையின் முதலமைச்சர் உயர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் மீது விமர்சனம் என்ற போர்வையில் சேறுபூசநினைப்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு எமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

 அவ்விதம் அவர்கள் செய்ய நினைப்பது அவருக்கு வாக்களித்த மக்களியே கேவலப்படுத்துவதற்கு நிகரானது என்பதை நினைவூட்டுகின்றோம். இவ்விதம் கீழ்த்தரமான சேறுபூசல்கள் மூலம் இவர்கள் காப்பற்ற நினைப்பது யாரை என்ற கேள்வி எம்முன்னால் எழுகின்றது.

இருப்பதைக் காப்போம், இழந்ததை மீட்போம் என்ற எமது தாரக மந்திரத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும்.

அந்த வகையில் உடனடித்தேவைகள் மற்றும் புனரமைப்பு மீள்கட்டுமானம் என்பவற்றுடன் வாழ்க்கைத்தரம் உயர்த்துதல் போன்ற பல பணிகள் எம்முன்னே விரிந்து கிடைக்கின்றது அவற்றுக்குதான் முன்னுரிமை வழங்கப்படும் அதன் பின்னர் இழந்த உரிமைகளை மீட்கும் பணி ஆரம்பமாகும்.

 எனவே வடமாகாண சபையின் முதலமைச்சரை இதை செய், அதை செய்யாதே என்று கட்டளை இடும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதை ஆணித்தரமாக இடிதுரைக்கிறோம்.

 வெறுமனே பார்வையாளர்களாக இருந்து கொண்டு விமர்சனம் செய்வதை கைவிட்டு இங்குள்ள மக்களின் பொருளாதரத்தை முன்னேற்றுவதற்கு கைகொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
இருப்பதைக் காப்போம்!
இழந்ததை மீட்ப்போம்!

0 கருத்துக்கள் :