கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையால் அச்சத்தில் உறைந்துள்ள: மகிந்தா, வீரவன்ச

7.9.13

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, காணி, காவல்துறை, கல்வி, சமூக, பொருளாதார அதிகாரங்களை கோருகின்றது.

 வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். இவை அனைத்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கோரிக்கைகள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர், பிரபாகரனை ஒரு வீரன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 இவையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உதவியுடன் கிழக்கில் ஆட்சியை கைப்பற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனால் செய்ய முடியாது போனதை, இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களால் செய்து விட முடியாது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாது போனதை, இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களால் செய்து விட முடியாது என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வடக்கு கிழக்கை இணைந்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட அலகை உருவாக்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டைப் பிரிக்க ஒரு போதும் நான் அனுமதிக்கமாட்டேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாது போனதை, இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களால் செய்து விட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :