யாழில் முதியவர்களை ஓட்டோக்களில் ஏற்றி வந்து வாக்களிக்கச் செய்த இளைஞர்கள்

21.9.13

இன்று இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் 03 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இங்கு காலை முதல் மாலை வரை சுமூகமான முறையில் மக்கள் வாக்களித்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.
ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஊரெழு, சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை போன்ற பகுதிகளிலும் மக்கள் காலை முதல் உற்சாகத்துடன் வாக்களித்தனர்.
இதேவேளை குப்பிளான் பகுதியில் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதற்குச் சிரமப்பட்ட முதியவர்களை இளைஞர்கள் சிலர் ஓட்டோக்களில் ஏற்றி வந்து வாக்களிக்கச் செய்தனர்.
இதன் மூலம் குறித்த பகுதியில் இன்று மக்களின் வாக்களிப்பு வீதம் உயர்வாகக் காணப்பட்டது.

0 கருத்துக்கள் :