யாழ் கீரிமலை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மஹிந்தவுக்கு மாளிகை!

28.9.13

வடமாகாணசபை நிதி துஸ்பிரயோகங்கள் தொடர்கின்ற நிலையினில் அந்நிதியினை பயன்படுத்தியே மஹிந்தவிற்கான வாசஸ்தலம் யாழ்ப்பாணத்தினில் அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வலி.வடக்கினில் உயர்பாதுகாப்பு வலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கீரிமலை பிரதேசத்தினில் வரலாற்று பெருமை மிக்க நகுலேஸ்வரம் ஆலயத்தை அண்டி சுமார் மூன்று மாடிகளை கொண்டதாக இவ்வாசஸ்தலம் அமைக்கப்பட்டு வருகின்றது.

முற்று முழுதான சிறீலங்கா படையினரின் கட்டுமானப்பிரிவுகளே கட்டுமானப்பணிகளினில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.மறுபுறத்தே இங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களிற்கு திரும்ப அனுமதிக்கப்படாதுள்ளதுடன் அவர்களது காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சிகள் தொடர்கின்றன.

எனினும் இக்கட்டுமானப்பணிகளிற்கு பெருமளவிலான நிதி வடமாகாணசபை நிதியிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளதுடன் அதனை முழுமையாக ஆளுநர் சந்திரசிறியே கையாள்வதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே விடுமுறையினில் வருகை தரும் மகள்கள் தங்கவென நட்சத்திர அந்தஸ்திலான விடுதியொன்றினை பழைய பூங்காபகுதியினில் சந்திரசிறி கட்டியுள்ளார்.இதற்கென வடக்கு மாகாணசபையினது நிதியிலிந்து சுமார் 19 கோடி வரையினில் சுருட்டப்பட்டிருந்தது.தற்போது தொடர்ச்சியாக ஜனாதிபதி மாளிகைக்கென நிதி ஒதுக்கப்பட்டு சுரண்டப்பட்டு வருகின்றது

0 கருத்துக்கள் :