அச்சுறுத்தல் மூலம் கப்பம் கோர உதவிய பெண் கைது

14.9.13

தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி மரண அச்சுறுத்தல் விடுத்து, கப்பம் கோர உதவிபுரிந்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அச்சுறுதல் விடுத்து பெறப்பட்ட பணத்தினை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பின்னர் புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஐந்து லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :