சிங்களமே மண்டியிடுவோம் என்று கனவிலும் நினைக்காதே! இது வீர மறத் தமிழர்களின் பூமி!

23.9.13

சிங்களத்தின் அடக்கு முறைக்கும், இலங்கை அரசின் போலித் தந்திரங்களுக்கும் நாங்கள் அடி பணியாத வீர மறவர் சந்ததி. சுட்டெரிக்கும் சூரியனையே நோக்கி மீண்டும் மீண்டும் பறக்கும் பீனிக்ஸ் போல எத்தனை முறை எரிந்தாலும் மீண்டும் உயிர் பெறக் காத்திருக்கின்றவர்கள்.
உலக வல்லரசுகள் துணையோடு இரசாயன ஆயுதங்களை வீசியெறிந்தாலும் மூச்சின் கடைசி நிமிடம் வரை மண்டியிடோம், சிங்கள பௌத்த பேரினவாதமே.... மண்டியிடோம்....
செப்டம்பர் 21 2013ஆம் ஆண்டு நாள் தமிழர் வரலாற்றில் மறக்க முடியாதது.
இலங்கையின் பௌத்த பேரினவாத அரசாங்கத்திற்கும் அது பொருந்தும்.
எவ்வாறு தமீழிழ விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட நாளில் தமிழர் முகங்கள் நிலத்தை நோக்கி குடைசாய்ந்தனவோ!
அதேபோல் இன்று உலகத்திலுள்ள அனைத்து தமிழனும் நான் தமிழன் என்று நெஞ்சில் தட்டிச் சொல்லுகின்றான்.
இப்படி உலகிலுள்ள ஒவ்வொரு தமிழனும் தலை நிமிரக்க் காரணமானவர்கள். வடக்கில் வாழும் தமிழர்கள்.
இதற்கெல்லாம் சொந்தக்காரர்களான வடக்கு வாழ் தமிழர்கள் இன்று எதுவும் தெரியாதவர்கள் போல ஆராவாரமின்றி இருக்கின்றனர்.
கிழக்கு வாழ் மறவர்களும் தம் அனுபவத்தை வடக்கிலே சொல்லி நன்கு பயிற்றுவித்துள்ளனர்.
அபிவிருத்தி என்னும் பெயரில் எங்களை வளங்களை சூறையாடுவதற்கும், எங்கள் ஊரில் எங்கள் வரிப்பணத்தில் வீதிகள் போடுவதற்கும் உங்களுக்கு மாலைகள் போடச் சொன்னீர்கள்.
ஆனால் உங்களை வாக்கு என்னும் பொல்லால் அடித்து நொருக்கினார்கள் அரச உத்தியோகத்தர்கள்.
ஐந்து மாவட்டங்களிலும் முதற்களத்தில் தம் பொன்னான வாக்குகளால் கழுத்தில் போட்ட மாலைகளை கசக்கி எறிந்து காறித் துப்பினார்கள் அரச ஊழியர்கள்
கற்றவர்களே இவ்வாறு செய்ய முடியும் என்றால் நாங்கள் என்ன குறைந்தவர்களா? மக்களின் ஊகமும் சரியாகத் தான் இருந்தது.
காலை எழு மணி முதல் நான்கு மணிவரை மக்கள் தங்கள் போர்க் களத்தில் புகுந்து விளையாடினார்கள்.
காலையிலேயே முற்றுகையை உணர்ந்த எதிரி சிங்களக் குண்டர்களை அனுப்பியும், இராணுவக் கைக்கூலிகளை அனுப்பியும் மக்களை அச்சுமூட்டினான்.
ஆனால் துப்பாக்கி சத்தங்களுக்குள்ளும், வன்முறைகளுக்குள்ளும் இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் தங்கள் குண்டுகளை தூக்கி எறிந்தார்கள்.
நாங்கள் தோற்றுப் போன இனம் அல்ல. எங்களுக்கு என கலை கலாச்சாரம் உண்டு. எங்கள் சுயநிர்ணயத்தை உன்னால் பறிக்க முடியாது.
பிரபாகரனுக்கு பின்னால் நாங்கள் அநாதைகள் என்று சொன்னாய். மண்டியிடச் சொன்னாய்
ஆனால் எங்கள் மண்ணை உன்னால் ஆள முடியாது. நாங்கள் மண்டியிடோம். எங்கள் தேசத்தில் உனக்கு இடமில்லை
வீரம் செறிந்த வீர மறவர்களின் இரத்தமும் தசையும், அழியாத செந்தமிழர்கள் உறங்கும் அழகான தேசம் .
உலகத்தில் எந்த வல்லரசுகளும் செய்யாத போரியல் சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள் உறங்கும் பூமி.
உன் கைகூலிகளுக்கு எங்கள் மண்ணில் வாலாட்ட இடம் என்பதே இல்லை.
இரும்புக் கள்ளனும் கட்சி விட்டு கட்சி தாவும் பொறுக்கிகளுக்கும் வாக்களிக்க நாங்கள் நாங்கள் என்ன? சுரணை கெட்டவர்களா?
வாங்குவோம் அவர்கள் எதை தந்தாலும் ஏனென்றால் அவை அனைத்தும் எங்கள் தேசத்து வளங்களை சூறையாடி அதில் அடித்த கொள்ளையே.
முள்ளிவாய்க்காலில் எங்கள் சகோதரங்களை கொன்று குவித்தாய், அடக்கி, அடக்கி வைத்திருந்தோம்.
என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளத்தில் அழுது கொண்டிருந்தோம். சந்தர்ப்பம் வந்தது. உன்னை நிலைகுலையச் செய்தோம்.
சத்தியமாகச் சொல்லுகின்றோம் எங்கள் உணர்வுகளை உன்னால் விலைக்கு வாங்க முடியாது.
எங்கள் தலைவன் பிரபாகரனின் ஆசை தான் எங்கள உள்ளத்திலும் இன்னமும் உள்ளது என்பதை உலகறியச் செய்து விட்டோம்.
இது வீரத்தமிழர்கள் வாழும் தேசம் இங்கு கைக் கூலிகளுக்கும் எட்டப்பன் கூட்டத்திற்கும் இடமில்லை. என்றும் இல்லை.
இந்த நொடியில் ஈழத்தின் ஒவ்வொரு தமிழனும் கரும்புலி தான்.
வெடித்தது எங்கள் உணர்வு மட்டும் தான் அதற்கு முன்னாலே உன்னால் நிற்க முடியவில்லை என்றால்???
எங்கள் உயிர் இன்னமும் உடலில் தான் உள்ளது. மீண்டும் எழுவோம்
இந்த தமிழர் மறவர்கள் துப்பாக்கி முனையிலும் உன் மிரட்டல்களுக்கு அடிபணியாதவர்கள்.
நாளை உலகம் சொல்லும் தமிழன் என்றால் வீரம்,
தமிழன் என்றால் துணிந்தவன், மண்டியிட்டு தலை சாய்க்காதவன்
இந்த நித்திலத்தில் வீரத்தின் அடியாளம் தமிழர்கள் நாங்கள் மட்டும் தான்
-தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்-

0 கருத்துக்கள் :