அம்புலன்ஸ் சாரதியாக மாறிய வைத்தியர்

12.9.13

அம்புலன்ஸ் சாரதியாக மாறி உயிரைக் காப்பாற்ற வைத்தியர் ஒருவர் போராடிய சம்பவம் ஒன்று அம்பலங்கொடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது-
அம்பலங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட இருதய நோயாளி ஒருவரின் நிலைமை கவலைக்கிடமானதை அவதானித்த வைத்தியர் மேலதிக சிகிச்சைகளுக்காக அந்நோயாளியை பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அம்பியூலன்ஸ் சாரதி அங்கு இல்லாத காரணத்தால் நோயாளி பாதிப்படையக் கூடாது எனக் கருதிய வைத்தியர் உடனடியாகத் தான் சாரதியாக மாறி நோயாளியை குறித்த வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உரிய நேரத்தில் ஒப்படைத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்

0 கருத்துக்கள் :