தமிழ் பேசும் மக்களின் தேசியத் தலைவர் என்றும் பிரபாகரனே:ரதன் முழக்கம்

13.9.13

தமிழினத்தின் வரலாற்றில் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் அண்ணன் பிரபாகரன் நடாத்திய போராட்டமே எம்மை தலைநிமிர வைத்தது என வவுனியா நகரசபை பதில் தலைவரும் வட மாகாணசபை வேட்பாளருமான எம்.எம். ரதன் தெரிவித்தார். வட கிழக்கிணைந்த எமது தாயகத்திலும் புலம்பெயர் தமிழர்களும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது மக்களும் என்றும் எப்போதும் தேசியத்தலைவராக நினைப்பது அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனையே என வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். இதேவேளை, ஈச்சங்குளம், கல்மடு பகுதிகளில் வேட்பாளர் ரதனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இலக்கம் 8ல் போட்டியிடும் ஆசிரியர் எம்.எம்.ரதன் நேற்று முந்தினம் ஈச்சங்குளம் ,கல்மடு பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஒரே ஒரு மாவீரர் துயிலுமில்லம் காணப்படும் ஈச்சங்குளம் மற்றும் அதனை அண்டிய கல்மடு பகுதிகளிலும் பிரசார பணிகளில் ஈடுபட்டதுடன் வீடு வீடாக சென்று மாவீரர் குடும்பங்களை சார்ந்தவர்களையும் முன்னாள் போராளிகளையும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் சந்தித்து கலந்திரையாடினார்.
0 கருத்துக்கள் :