9 வயது மகளை நண்பர்களுடன் பலாத்காரம் செய்த கொடூர தந்தை

26.9.13

9 வயது மகளை நண்பர்களுடன் சேர்ந்து 2 வருடங்களாக வீட்டில் சிறைவைத்து தந்தையே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள குண்டரா படப்பக்கரையை சேர்ந்தவர் விஜயன்(44). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 15 ஆண்டுக்கு முன் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. விஜயன் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால், அவரது மனைவி, குழந்தைகள் விஜயனிடமிருந்து பிரிந்து சென்றனர்.
அதன்பின் விஜயன், வர்க்கலாவை சேர்ந்த சரிதா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். 2வது மனைவி மூலம் 9 வயதில் மகள் உள்ளார்.

கடந்த 2 ஆண்டுக்கு முன் சரிதா இறந்தார். இதையடுத்து விஜயன், அவரது தாய் ரோஸ்மேரி மற்றும் 9 வயது மகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 2 வருடங்களாக விஜயனும் அவரது நண்பர்களான ராஜன்(42), பிஜு (36), சைஷு(21) மற்றும் வீரப்பன்(40) ஆகியோர் 9 வயது சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் சிறுமி பலாத்காரம் செய்யப்படுவதை, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தற்செயலாக கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கொட்டாரக்கரை மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அனிதா குமாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் உடனடியாக விஜயன் வீட்டிற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அச்சிறுமியின் தந்தையும், அவரது நண்பர்கள் 4 பேரும் கடந்த 2 ஆண்டாக தன்னை வீட்டில் அடைத்து பலாத்காரம் செய்து வந்ததாக சிறுமி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜயன், அவரது நண்பர்கள் ராஜன், பிஜு, சைஷு ஆகிய 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான வீரப்பனை தேடி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :