பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல்கள்; 40 பேர் பலி

29.9.13

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இன்று இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 103 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இக்குண்டுவெடிப்புகள் காரணமாக கடைகளும் வாகனங்களும் தீப்பற்றி எறிந்துள்ளன. சுமார் 50 கடைகள் முற்றாகவோ பகுதியளவிலோ சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :