தியாக தீபம் திலீபனின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று

21.9.13

தமிழீழத் தியாக விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) 26 ஆவது ஆண்டு நினைவு தினம் புலம் பெயர் தேசங்களிலும் தமிழர் பகுதிகளிலும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழீழத் தாயக மண்ணிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூரில் தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்தார். 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி உண்ணா விரதத்தை ஆம்பித்த திலீபன் 12 நாள்கள் நீராகரமின்றி அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்தார். அவர் தனது அகிம்சை போராட்டைத்தை ஆரம்பித்து நடத்திய 7ஆம் நாள் இன்றாகும். இதே வேளையில் தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வழமையாக ஒவ்வோராண்டும் திலீபனின் நினைவு தின நாள்களில் தமிழர்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவங்கள் இடம்பெறுவது வழமை ஆகும். அந்தவகையில் இந்த வருடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடமாகாண சபைத் தேர்தல் இடம்பெறுகின்றது.

0 கருத்துக்கள் :