165 ஆபாச இறுவட்டுகளுடன் போலி ஆயுர்வேத டாக்டர்

12.9.13

சட்­ட­ரீ­தி­யான சான்­றி­தழ்கள் மற்றும் அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி கடந்த 15 வரு­டங்­க­ளாக சிகிச்­சை­ய­ளித்து வந்த போலி ஆயுர்­வேத வைத்­தி­ய­ரொ­ரு­வரை 165 ஆபாச இறு­வட்­டு­க­ளுடன் மல்­வத்­து­ஹி­ரி­பிட்­டிய பொலிஸார் அம­னு­கும்­புர பிர­தே­சத்தில் வைத்து கைது செய்­துள்­ளனர்.

ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­ய­ரெனக் கூறப்­படும் 62 வய­தான இந்த போலி ஆயுர்­வேத வைத்­தி­யர்­, அ­முனு­கும்­பு­ர­யி­லுள்ள தனது வீட்­டிலும் மிரிஸ்­வத்த பிர­தே­சத்தில் இரண்டு நிலை­யங்­க­ளிலும் பெண்கள் நோய்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளித்து வந்­துள்ளார்.

அவ­ரி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட கடிதத் தலைப்­பு­களில் தேசிய வைத்­தியர், திறந்த பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் எனவும் வைத்­திய சிரோன்­மணி, சமா­தான நீதவான் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாகப் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

அமு­னு­கும்­புற சிகிச்சை நிலை­யத்­தி­லி­ருந்து 165 ஆபாச இறு­வட்­டுகளும் ஆயுர்­வேத மருந்து லேபில்கள் என்­ப­னவும் கைப்­பற்­றப்­பட்­டன.

சந்­தே­க­ந­ப­ரான இப்போலி ஆயுர்வேத வைத்தியரை கம்பஹா நீதி­வான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய கம்பஹா பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

(எஸ்.கே)

0 கருத்துக்கள் :