எஸ்.எம்.எஸ். மூலம் அறிமுகமான காதலனால் 13 வயது மாணவி பாலியல்

18.9.13

கைத்­தொ­லை­பேசி ஊடாக குறுஞ்­செய்தி மூலம் காத­லித்து அறி­மு­க­மான குறுஞ்­செய்திக் காதலன் 13 வயது பாட­சாலை மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி விட்டு தலை­ம­றை­வான சம்­ப­வ­மொன்று குறித்து குரு­ணா­கலை பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பிரி­வுக்கு அறி­விக்­கப்­பட்­ டுள்­ளது.

கண்டி தலாத்­து­ஓய பிர­தே­சத்தை சேர்ந்த 22 வய­தான இந்த இளைஞர் குரு­ணா­கலை நக­ருக்­க­ரு­கி­லுள்ள மல்­ல­வ­பிட்­டிய பிர­தே­சத்தைச் சேர்ந்த 13 வயது மாண­வி­யுடன் தொலை­தொ­டர்பு ஊடாக வலை­ய­மைப்பின் மூலம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நண்பர் சந்­திப்பு வலை­ய­மைப்பின் குறுஞ்­செய்தி மூலம் அறி­மு­க­மாகி  காதல் தொடர்பை ஏற்­ப­டுத்திக் கொண்­டுள்ளார். இந்த குறுஞ் செய்திக் காதல் மூன்று தினங்கள் நீடித்­தது.

கடந்த 12 ஆம் திகதி மல்­ல­வ­பிட்­டிய மல்­லவி பிர­தே­சத்­துக்கு வந்த இந்த இளைஞர் விடு­தி­யொன்றில் அறை­யொன்றை ஒதுக்கி அங்கு தங்­கி­யுள்ளார். இரவு 11 மணி­ய­ளவில் மாண­விக்கு குறுஞ்­செய்தி அனுப்­பி­யுள்ளார்.

இந்த 13 வயது பாட­சாலை மாணவி பெற்­றோ­ருக்குத் தெரி­யாமல் விடு­திக்கு வந்து இதற்கு முன்னர் ஒருபோதும் கண்­டி­ராத இளை­ஞ­னுடன் விடு­தியில் தங்­கி காதல் சுகத்தை அனு­ப­வித்­துள்ளார். அதி­காலை இளைஞன் மாண­வியை வீடு செல்­லும்­படி கூறியும் மாணவி மறுக்­கவே ஒரு­வாறு மாண­வியைக் கைவிட்டு இளைஞன் தலை­ம­றை­வா­கி­யுள்ளான்.

இந்த விடயம் மாணவி தனது சகோ­தரன் மூலம் பெற்­றோ­ருக்கு தெரி­விக்க, பெற்றோர் குரு­ணா­கலை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். பொலிஸார் தங்கும் விடுதி முகா­மை­யா­ள­ரிடம் தக­வலைப் பெற்று தல­வாத்­து­ஓய பொலி­ஸாரின் ஆத­ர­வுடன் இளை­ஞனைக் கைது செய்­துள்­ளனர்.

  கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி குருணாகல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
 (எஸ்.கே)

0 கருத்துக்கள் :