நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய தயார் மேர்வின் சில்வா

28.8.13

இறுதிக்கட்ட போரில் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்றுள்ளார். அவர் வருகைக்கு சிங்கள வெறியர்களும், புத்தபிட்சுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், சிங்கள மந்திரி மேர்வின் சில்வா அவரை அவமதிக்கும் வகையில், நவநீதம்பிள்ளையை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக திமிருடன் கேலி கிண்டலாக பேசியுள்ளார்.

 ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை குவேனியை விஜயனுக்கு திருமணம் செய்து வைத்தது போன்று நவநீதம்பிள்ளை விரும்பினால் நாளையே அவரை திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, கிறிஸ்துவுக்கு முன்னரே உலகத்துடன் இலங்கை தொடர்பு கொண்டிருந்தது. ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிக்கும் முன்னரே இலங்கையில் பறக்கும் எந்திரம் பயன்படுத்தப்பட்டதாக நூல்களில் கூறப்பட்டுள்ளது.
 வரலாற்றை கற்பிக்கும் நோக்கில் என்னுடன் அவர் இலங்கையை சுற்றி பார்க்க வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

0 கருத்துக்கள் :