தமிழர்கள் அபிவிருத்தியை மட்டுமே கேட்கவேண்டும்: சொல்லும் சிங்கள அமைச்சர்

9.8.13

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை தமிழ் அரசியல்வாதிகள் விரும்பவில்லை என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இராணுவம் சாதாரண மக்களின் காணிகளை கைப்பற்றவில்லை. விடுதலைப்புலிகளின் காணிகளையே இராணுவத்தினர் கைப்பற்றினர். காணி ஒன்றின் உரிமையை உறுதிப்படுத்த மக்களும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன.
தமிழ் மக்கள் மீள்குடியேற்றுதில் இருந்த பிரதான தடை கண்ணி வெடிகளாகும். தமிழ் மக்கள் அபிவிருத்தியை மாத்திரமே கேட்கவேண்டும் என கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :