மும்பை:ரயிலில் அமெரிக்க பெண் மீது தாக்குதல்

18.8.13

அமெரிக்காவை சேர்ந்த மிசெல் மார்க் என்ற பெண் மும்பை சர்ச் கேட் ரயில்நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஏறினார். ரெயில் புறப்பட்டு மரைன்லைன்ஸ் மற்றும் சார்னி ரோடு நிலையம் இடையே சென்றுகொண்டிருந்த போது ஒருவன் அவரை பிளேடால் தாக்கினான்.

அவரிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் அந்த மர்ம ஆசாமி, மிசெல் மார்க்கின் முகம், கழுத்து, கரங்களில் தாக்கினான்.

 பயணிகள் இருந்ததால், அவனால் கொள்ளையடிக்க முடியாமல் அடுத்த நிலையத்தில் இறங்கி அவன் தப்பி சென்றான்.
பின்னர், காயமடைந்த மிசெலை மும்பை தெற்கு பகுதியில் உள்ள நாயார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சையளித்தனர்.

சிகிச்சைக்கு பிறகு மிசெல் அங்கிருந்து வெளியேறினார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவனை தேடி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :