நோர்வேயில் இப்படியும் ஒரு சிக்கல்

19.8.13

ஸ்பெயின் நாட்டவரான பாப்லோ பிக்காசோ, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் ஆவார். கியூபிசம் என்ற ஓவியபாணியிலேயே இவரது பெரும்பாலான ஓவியங்கள் அமைந்திருக்கும்.

நார்வே நாட்டில் எச்,ஒய் என்று குறிப்பிடப்படும் அரசாங்கக் கட்டிடங்களின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பிக்காசோவின் வரைவுகள் மணல் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. கான்கிரீட் கட்டிடங்களில், பிக்காசோவின் முதல் முயற்சியாக இந்த ஓவியங்கள் வெளிப்பட்டன.

ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதியன்று ஆஸ்லோவில் ஆண்டர்ஸ் பிரேவிக் என்ற தனிமனிதன் நடத்திய வேன் குண்டுவெடிப்பில் எச் பிளாக்கின் அரசு கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

 இந்தக் கட்டிடங்களை சரிப்படுத்துவதை விட, பிக்காசோவின் ஓவியங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிதாகக் கட்டுவதே சிறந்த பொருளாதாரத் தீர்வாகும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நார்வே நாட்டு பத்திரிகையின் கருத்துக்கணிப்பில் பொதுமக்களில் 39.5 சதவிகிதம் பேர் கட்டிடங்களை இடிப்பதற்கு ஆதரவாகவும், 34.3 சதவிகிதம் பேர் இந்தக் கட்டிடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பின் பயங்கரத்தை நினைவுபடுத்தும் இந்தக் கட்டிடங்களை இடிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று ஒரு கருத்து நிலவி வந்தாலும், கலாச்சாரமான சகாப்தங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.

அடுத்த வருட ஆரம்பத்தில்தான் இந்த கட்டிட புனரமைப்பு வேலைகள் துவங்கப்பட இருப்பதால் அரசும் இன்னும் இறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை.இந்த ஓவியங்களின் உரிமைகள் பிக்காசோ குடும்பத்தினரிடம் உள்ளதால் அவர்களிடமிருந்தும் அரசு அனுமதி பெறவேண்டும்.

 பிக்காசோ நிர்வாகத்தின் சட்ட வல்லுநர் கிளாடியா ஆண்ட்ரியு இது குறித்து பேச்சுவார்த்தையினை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துக்கள் :