பேராசியரும் நடிகருமான பெரியார் தாசன் மரணம்

19.8.13

கல்லூரி பேராசிரியரும் நடிகருமான பெரியார் தாசன் இன்று அதிகாலை 63ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

பெரியார் தாசன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பெரியார் தாசன் அவரது கண்களையும், உடலையும் தானமாக வழங்குவதற்கு பதிவு செய்து இருந்தார். இதனால், அவரது கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது உடலும் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படவுள்ளது.

சென்னை பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் கருத்தம்மா, காதலர் தினம், தமிழ்படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளதுடன் பட்டிமன்றங்களிலும், கருத்தரங்குகளிலும் பேசி பகுத்தறிவு சிந்தனைகளை ஏற்படுத்தபாடுபட்டுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் பெரியார் தாசன், இஸ்லாம் மார்க்கத்தை தழுவிக்கொண்டு அப்துல்லா என பெயர் மாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :