சிறிலங்காவில் அங்கர், மலிபன், டயமன்ட் பால்மா விற்பனைக்குத் தடை

8.8.13

நியுசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும், அங்கர், மலிபன், டயமன்ட் பால்மா வகைகளை, விற்பனை செய்யக் கூடாது என்று அறிவித்துள்ள சிறிலங்கா அரசாங்கம், பால்மா தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடைசெய்துள்ளது.

நேற்று நடைமுறைக்கு வந்த இந்தத் தடை மறுஅறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என்று சிறிலங்கா சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவில், ஆபத்தான பக்ரீரியா கிருமி இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்தே, 1980ம் ஆண்டின் உணவுச்சட்டத்தின் கீழ், இந்தத் தடைகளை சிறிலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் விதித்துள்ளார்.

அத்துடன், அனைத்து பால்மா வகைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சின் உணவு ஆலோசனைக்குழு தீர்மானித்துள்ளது.

பால்மாக்களில் குளொஸ்ட்ரீடியம் பொட்டுலீனம் பக்ரீரியா உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மலிபன் நிறுவனம், பொன்டேரா நிறுவனம், ஜீ.எம்.மொகமட் அலி நிறுவனம் ஆகியவற்றினால் சந்தைப்படுத்தப்படும், மலிபன், அங்கர், டயமன்ட் பால்மா வகைகளை உடனடியாக விற்பனையில் இருந்து அகற்றுமாறும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :