கிளின்டன் - மோனிகா பாலியல் சர்ச்சை மீண்டும் கிளறும் இரகசிய ஒலிநாடா

11.8.13

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி பில் கிளின்­ட­னுக்­காக  வெள்ளை மாளிகை முன்னாள் ஊழி­ய­ரான மோனிகா லுவின்ஸ்கி எனும் பெண் பதி­வு­செய்த காதல் ரசம் கொட்டும் உரை­யாடல் அடங்­கிய ஒலி ­நா­டா­வொன்று 15 வரு­டங்­களின் பின் இப்­போது வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

1992 முதல் 2000 ஆம் ஆண்­டு­வரை அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்த பில்­கி­ளின்­டனின் அர­சியல் வாழ்வில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­திய விட­ய­மாக மோனிகா லுவின்­ஸி­யு­ட­னான பாலியல் விவ­காரம் உள்­ளது.

அமெ­ரிக்க வர­லாற்றில் மிகப்­பெ­ரிய சர்ச்­சை­களில் ஒன்­றா­கவும் விளங்கும் இவ்­வி­டயம் பில் கிளின்­டனின் பத­விக்கும் இவ்­வி­டயம் ஆப்­பு­வைத்­து­விடும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் நூலி­ழையில் தப்­பிப்­பிழைத்தார் கிளின்டன்.

பில் கிளின்­ட­னுக்கும் மோனிக்கா லுவின்­ஸிக்கும் இடை­யி­லான சர்ச்­சைக்­கு­ரிய உரை­யாடல் அடங்­கிய ஒலிப்­ப­தி­வுகள் பல வரு­டங்­க­ளுக்கு முன்­னரே அழிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக நம்­பப்­பட்­டது. எனினும், அவற்றில் ஒரு இர­க­சிய ஒலி­நாடா தனக்கு கிடைத்­துள்­ள­தாக அமெ­ரிக்க சஞ்­சி­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது.

1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதி­வு­செய்­யப்­பட்­ட­தாக கூறப்­படும் இந்த ஒலி­நாடா, இதற்­குமுன் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டாத ஒன்­றாகும்.

அப்­போது ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த பில் கிளின்­ட­னுடன் குறு­கிய நேர சந்­திப்­பொன்றை ஏற்­ப­டுத்தும் நோக்­குடன், பில் கிளின்டன் செவி மடுப்­ப­தற்­காக வெள்­ளை­ மாளி­கைக்கு அனுப்­பு­வ­தற்­காக இந்த ஒலிப்­ப­திவு நாடாவை மோனிகா லுவின்ஸ்கி தயா­ரித்­துள்ளார்.

3 நிமி­டங்­களும் 47 விநா­டி­களும் கொண்ட இந்த ஒலி­நாடா 1997 நவம்­பரில் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. கிளின்­டனும் மோனி­காவும் 9 தட­வைகள் பாலியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. இவற்றில் கடைசி சந்­திப்பு இடம்­பெற்று 6 மாதங்­களின் பின்­னரே இந்த உரை­யாடல் இடம்­பெற்­றுள்­ளது. அவ்­வே­ளையில் அமெ­ரிக்க இரா­ணுவத் தலை­மை­ய­க­மான பெண்­ட­கனில் மோனிகா லுவின்ஸ்கி பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்தார்.

முறை­யான பதி­வு­க­ளின்றி கிளின்­டனை சந்­திப்­ப­தற்கு மோனிகா லுவின்ஸ்கி முயற்­சிப்­பதை ஒலி­நாடா வெளிப்­ப­டுத்­து­கி­றதாம். இதற்­காக கிளின்­டனின் செய­லா­ள­ரான பெற்ற கூரி­யுடன் இணைந்து திட்­ட­மி­டு­மாறு கிளின்­ட­னுக்கு மோனிகா லுவின்ஸ்கி ஆலோ­சனை கூறு­கிறார்.

“நீங்கள் 7 அல்­லது 7.30 மணி­ய­ளவில் அலு­வ­ல­கத்தை விட்டு வெளியே செல்­லுங்கள்.

அப்­போது, என்னை வெறுக்கும் எனக்கு பெரும் தொல்­லை­களை ஏற்­ப­டுத்தும் அனை­வரும் வீடு­க­ளுக்கு சென்­றி­ருப்­பார்கள். பின்னர் நீங்கள் இர­க­சி­ய­மாக பின்­வ­ழி­யாக வாருங்கள். அதே­வேளை நான் சட்­டென வந்­து­வி­டு­கிறேன். அதன்பின் சிறி­து­நேரம் 15 நிமிடம் அல்­லது அரை­ம­ணித்­தி­யாலம் நாம் செல­வி­டலாம்” என லுவின்ஸ்கி கூறி­யுள்­ள­தாக அச்­சஞ்­சிகை தெரி­வித்­துள்­ளது.

உலகின் ஒரு வல்­ல­ரசின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­துக்­கொண்­டி­ருந்த, ஏற்­கெ­னவே திரு­ம­ண­மான பில் கிளின்­ட­னுக்கு ஒரு பதின்ம பருவ யுவதி போன்று யோச­னை­களை கூறி­யுள்ளார் அப்­போது 24 வயது யுவ­தி­யாக இருந்த மோனிகா லுவின்ஸ்கி. “நாம் இரு­வரும் டேட்டிங் செல்ல முடிந்தால் திரைப்­படம் பார்க்க போகலாம், டின்னர் சாப்­பிட போகலாம்” என்­றெல்லாம் அவர் தெரி­வித்­துள்­ளாராம்.

கிளின்­டனை சந்­திக்க வாய்ப்பு கிடைத்தால் தனது ஆடை­களை களைந்து நிர்­வா­ண­மாக காட்­சி­ய­ளிக்கத் தயார், கிளின்டன் தனக்கு தேவை­யா­ன­தெல்லாம் செய்­து­கொள்ளாம் எனவும் மோனிகா லுவின்ஸ்கி கூறி­யுள்­ளாராம்.


மோனிகா லுவின்ஸ்­கி­யினால் சுத்­தி­க­ரிப்பு ஊழி­ய­ராக நிய­மிக்­கப்­பட்ட ஒரு­வரால் இந்த ஒலி­நா­டாவின் பிரதி இர­க­சி­ய­மாக பிர­தி­செய்­யப்­பட்­ட­தா­கவும் அச்­சுத்­தி­க­ரிப்பு ஊழியர் 15 வரு­டங்­க­ளாக பாது­காத்து வந்­த­தா­கவும் மேற்­படி அமெ­ரிக்க சஞ்­சிகை தெரி­வித்­துள்­ளது.

1998 ஜன­வ­ரியில் பில் கிளின்டன்–மோனிகா லுவின்ஸ்கி பாலியல் தொடர்­புகள் அம்­ப­ல­மாகி உல­கெங்கும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­ன.


மோனிகா லுவின்­ஸிக்கும் தனக்கும் இடை­யி­லான பாலியல் தொடர்­பு­களை ஆரம்­பத்தில் கிளின்டன் மறுத்த போதிலும் பின்னர் அவை உண்மை என ஒப்­புக்­கொண்டார்.

இரு­வ­ருக்கும் இடை­யி லான அந்­த­ரங்க விட­யங்கள் அனைத்தும் நீதி­மன்றில் அம்­ப­ல­மா­கின. அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தின் குற்­ற­வியல் பிரே­ர­ணை­யி­லி­ருந்து நூலிழையில் தப்­பிய கிளின்டன் (66) 2000 ஆம் ஆண்டு வரை அப்­ப­த­வியில் நீடித்தார். ஆனால், இப்­போது இந்த ஒலி­நாடா வெளி­யான தருணம் கவ­னத்­துக்­கு­ரி­ய­தாகும்.

2016 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் ஆளும் ஜன­நா­யகக் கட்­சியின் சார்பில் போட்­டி­யி­டு­வ­தற்கு அதிக வாய்ப்­புள்­ள­வ­ராக பில் கிளின்­டனின் மனை­வி­யான ஹிலாரி கிளின்டன் (62)கரு­தப்­ப­டு­கிறார். அவரின் பிர­சா­ரங்­க­ளுக்கு இந்த ஒலி­நாடா விவ­காரம் சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தக்­கூடும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

அதே­வேளை, நியூ­யோர்க்கை சேர்ந்த ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அந்தனி வெய்னர் பாலியல் எஸ்.எம்.எஸ்.களை 21 வயதான பெண்ணொருவருக்கு அனுப்பிய குற்றச்சாட்டையடுத்து 2011 ஆம் ஆண்டு பதவி விலகினார்.

அவர் இப்போது நியூயோர்க் மேயர் பதவிக்கு போட்டியிடும் நிலையில் மேலும் பல பெண்களுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளையும் படங்களையும் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா முழுவதும் இவ்விடயம் சூடு பிடித்துவரும் நிலையில் பில் கிளின்டன் - மோனிகா லுவின்ஸ்கி விவிகாரம் மீண்டும் கிளறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://

0 கருத்துக்கள் :