களமாடிய வீராங்கனை இன்று இரண்டு பிள்ளைகளுடன் படும் துயர்

12.8.13

களமாடிய வீராங்கனை இன்று கையில் இரண்டு பிள்ளைகளுடன்  படும் துயர் அறிந்து
யேர்மனியில் வாழ் ஆறு ஈழத்து உறவுகள் அவள் வாழ்வின் ஆதாரத்துக்கு உதவி செய்துள்ளார்கள்,
இது போல் நீங்களும் இனம் கண்டு எம் உறவுகளுக்கு உதவ  வேண்டும்  என்ற ஓர் நோக்கில் இந்தத் தகவலை எடுத்து வருகிறோம்.

 களமாடிய வீரர்கள் தமக்காக களமாடச் செல்லவில்லை  எம் ஈழ மக்கள் நாங்கள் நலம் வாழ தாங்கள்  தீயில் வீர காவியமாகச் சென்றவர்கள்  அப்படிப்பட்டவர்களை நாங்கள் மறக்காமல் அவர்கள்
வாழ்க்கைக்கு எம்மால்  முடிந்தவற்றைச் செய்வோம்.

   எமக்குத் தெரிந்த வரை இங்கே புலம் பெயர் வாழ்வில் நாம் பணம் செழிக்க காரணிகள் கூட அவர்கள் எனலாம் நாங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ  கள நிலை மாறியுள்ளது
ஆனால் எங்கள் கடமைகள் மாறவில்லை அதனால் நாங்கள் குழுக்களாக இணைந்து குருவிகள் போல் அல்லது  மேல் உதவியவர்கயள் போல்  செயலாற்றுவோம்.

  உண்மையில் மேல் நாங்கள்  கூறி உறவுகள் தாங்கள் செய்த பணியை இங்கே
பதிவுக்கு தர விரும்பவில்லை ஆனால் இந்தக் பதிவின் மூலம் எங்கள் உறவுகளுக்கு இவர்களை ஓர் உதாரனமாகக் கொண்டு பலர் உதவிட முன் வரலாம் என்ற நோக்கிலே அவர்கள் அங்கீ காரத்துடன் இந்தத் தகவலைத் தருகிறோம்.

அத்தோடு ஈழக்கவி அவர்களின்  கவிதை ஒன்று இந்தக் கருத்தோடு ஒத்து நிற்பதால் அதையும் இணைக்கிறோம்
எதை இணைத்தாலும் எங்கள் கரம் இணைத்து மனம் இணைய எம் ஈழ மக்கள் வாழ்வு செழிக்க கரம் இணைத்து செயலாற்றல் இல்லாமை போக்கும் இதயத்துக்கு நின்மதி ஏற்றும் இல்லாதர் வாழ்வில் ஒளியேற்றும் என்பதை எமது உள்ளத்தில் பதிப்போம்.

உரிமைப் போருக்காய்
தன்னை  அர்பணித்தவள்
உதவிக் கரம் நீட்டும் நீலை
உருவாக்கியது யார்?
 இவள் போல் எம்  நிலத்தில் நின்று
எமக்காய் களமாடிய எத்தனையோபேர்
வாழ வழியின்றி தவித்து நிற்க்கின்றனர்
அன்னை பூமி நிலைபாரீர்
அதர்க்கு கரம் கொடுப்போம் வாறீர்

புலத்தின் இருந்து  சேர்த நிதியாளர்களே
எங்கே உங்கள் பேச்சைக்கானவில்லை
இன்று களமாடிய வீரர்கள் சிலர்
கஞ்சிக்கும் வழியில்லாது இருக்கும் நிலையில்
எங்கே ஒளிந்தீர்கள்
எங்கே  உங்கள் உதவிப் பணிகள்

ஊர் வலம் கூட்டி
உடுக்கடித்து உரு ஏற்றி
உசுப்பேற்றி களம் அனுப்பி விட்டு
உதவி என்ற  தேவை  ஏற்படும் போது
ஒதுங்கி நிற்பது  ஏன்?
நாங்கள் இருக்கிறோம்  என்று தான்
நமக்காய் மண்மீட்கச் சென்ற வீரர்
அவர்கள் நாதியற்ற நிலை ஏன்?

வீம்பாய் வார்தைகளை
விதைத்து விட்டு -நாங்கள்
வெந்த புன்னில் வேல் பாச்சி நிற்கிறோம்
தாங்கா துயரத்தில் தாங்கி நிற்கும் துயர் துடைக்க
தர்மம் ஏதும் செய்திடவா!

தானம்  அழித்த தமிழன்
தட்டெடுக்கும் நிலை வேண்டாம்
தரணிவாழ் தமிழரோ  வா!
துங்காத் தமிழனாய் துயர் துடைக்க!

அவர்  செய்வார் இவர் செய்வார் என்று இருக்காமல்
அணைவரும் முன்வந்து
அறிந்து அவர் நிலை அறிந்து
போக்கு துயர் புண்ணியம் சோர்
சேர்த்த சொத்து செத்தாலும்  சுடலைக்கும் வராது
செய்திடத் தருமம் செயல்
வாழ்யை ஓங்கும் அன்றித் தாளாது.

******ஈழக் கவி**********
 

0 கருத்துக்கள் :