யாழ்/ சுயேட்சை வேட்பாளர் சடலமாக மீட்பு

3.8.13

சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் காலை கண்டெடுக்கப்பட்ட சடலம் வட மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள வைத்திலிங்கம் இராமச்சநதிரன் (வயது 73) என்பவர் என மனைவியினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணப்பட்டதையடுத்து சுன்னாகம் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன்  மல்லாகம் நீதவான் நிதிமன்ற நீதிபதி மேற்க்கொண்ட விசாரனையைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சடலமாக மீட்க்கப்பட்டவர் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக மனைவிஇ பிள்ளைகளை பிரிந்து தனிமையில் வாழந்து வந்துள்ளார்.

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்க்காக சுயேட்சையாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் அவருக்கு பாம்பு சின்னமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துக்கள் :