சிரியா மீது தாக்குதல் பீதி: அயன் டோம்களை நிலைநிறுத்தியது இஸ்ரேல்

30.8.13

சிரியா மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ தாக்குதல் நடத்தலாம் என்ற போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் ஏவுகணைகளை எதிர்த்து அழிக்கும் 'அயன் டோம்'களை இஸ்ரேல் நிலைநிறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, 'நாங்கள் சிரியா போரில் ஈடுபடவில்லை, எனினும், இஸ்ரேல் மக்களுக்கு யாராவது தீங்கு விளைவித்தால் எங்கள் ராணுவம் மூர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கும்.

இஸ்ரேலிடம் மிக வலிமையான ராணுவமும், இதற்கு முன்னர் இருந்ததைவிட மேம்படுத்தப்பட்ட, சக்தி வாய்ந்த, நவீன ஆயுதங்களும் தற்போது உள்ளன.

ஏவுகணைகளை முறியடித்து அழிக்கும் 'அயன் டோம்'கள் மற்றும் தடுத்து திசை திருப்பும் சாதனங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன' என்று கூறினார்

0 கருத்துக்கள் :