நகம் வெட்டிய சிங்கப்பூர் சாரதி பணி நீக்கம்!

21.8.13

ஓடும் பஸ்ஸில் நகம் வெட்­டிய சாரதி ஒருவர் பணி நீக்கம் செய்­ய­ப்பட்ட சம்­ப­வ­மொன்று அண்­மையில் சிங்­கப்­பூரில் இடம்­பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சிங்­கப்­பூரின் சங்கி விமா­ன நிலையத்­தி­லி­ருந்து புறப்­பட்ட பஸ்ஸை வீதியில் செலுத்­திக்­கொண்டே குறித்த சாரதி தனது நகத்­தினை வெட்­டி­யுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த பயணி ஒருவர் அவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சியின் மூலம் சார­தியின் செயலை வீடியோ செய்­துள்ளார்.

இந்த வீடி­யோ­வினை பார்த்து பணி நீக்கம் செய்­யப்­பட்ட சாரதி குறித்த தக­வல்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இது குறித்து எஸ்.எம். ஆர்.ரீ. போக்­கு­வ­ரத்து சேவைகள் நிறு­வ­னத்தின் பேச்­சாளர் கூறு­கையில், குறித்த சம்­பவம் தொடர்பில் விசா­ரணை நடந்­ததில் அந்த சார­திக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. பின்னர் உட­ன­டி­யாக அவர் பணி நீக்கம் செய்­யப்­பட்டார். பய­ணி­களின் பாது­காப்பே எங்­க­ளுக்கு முக்­கியம் எனத் தெரி­வித்­துள்ளார்.

0 கருத்துக்கள் :