ஓமந்தை சோதனைச் சாவடியில் மக்கள் மீதான சோதனைகள் நிறுத்தம்

31.8.13

வவுனியா ஓமந்தை பிரதான சோதனைச் சாவடியில் இன்று முதல்  பொது மக்கள் மீதான சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

வவுனியா ஓமந்தை இராணுவ முகாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே
 அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;
வடக்கில் இருந்து தெற்கிக்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் கொண்டு செல்லப்படும் பொருட்கள் சோதனை நடவடிக்கைகளுக்காக இறக்கி ஏற்றப்படாது எனவும் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களின் பதிவு மட்டும்
 இடம்பெறும் எனவும் போக்குவரத்து பயணிகளை வாகனங்களில் இருந்து இறக்கி சோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இச் சோதனைச்சாவடி  யுத்த காலத்தின் போது ரிமோட் கொன்றோல்கள் வயர்கள் தொலை நோக்கிகள் திசை காட்டிகள் சிறிய ரக பற்றிகள் போன்ற இராணுவ பயன்பாட்டிற்க்கான பொருட்களை கொண்டு செல்வதை தடுப்பதற்காக
 அமைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவத்தார்.

விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் சுமார் 15 வருடங்களாக இந்த சோதனை சாவடி பிரதானமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துக்கள் :