எம்.ஜி.ஆர். சிலைக்கு வைத்த கல்வெட்டு இடித்து தரைமட்டம்

3.8.13

புதுக்கோட்டை நகரின் முக்கியமான இடமாக உள்ளது பழைய பேருந்து நிலையம் பகுதி. அந்த இடத்தில் மதுரை, அறந்தாங்கி - பட்டுக்கோட்டை - ஆலங்குடி, பேருந்து நிலையம் - திருச்சி சாலைகளின் சந்திப்பு உள்ள இடம். இந்த சந்திப்பில் கடந்த 24.2.1995 அன்று அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு அப்போதைய அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருந்த அமைச்சர் எஸ்.ரகுபதி (இப்போது தி.மு.க) தலைமையில் ஆள் உயர எம்.ஜி.ஆர். சிலையை நிறுவினார்.

இந்த விழாவில் கொ.ப.செ வாக இருந்த கே.ஏ. செங்கோட்டையன், கழக பொருளாளர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுசெயலாளர் எஸ்.டி.எஸ். சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, தென்னவன், பொன்னுச்சாமி, ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்துரை வழங்கினார்கள். இந்த தகவல்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர். சிலையின் கீழே உள்ள கல்வெட்டில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி தி.மு.க பக்கம் போய் எம்.பியாக வெற்றி பெற்ற மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவ்வளவு நாட்களும் இந்த கல்வெட்டில் ரகுபதி பெயர் இருந்தது. இப்போது இந்த கல்வெட்டில் இருக்கும் ரகுபதி பெயரை நீக்க வேண்டும் என்று மாவட்ட அ.தி.மு.க சார்பில் உத்தரவுகள் பரக்க அந்த கல்வெட்டை அகற்றி இப்போது மாவட்ட அ.தி.மு.க நிர்வாகத்தில் உள்ளவர்களின் பெயர்களை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.

புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் சேட் (எ) அப்துல் ரகுமான் கல்வெட்டை பார்த்து சென்றுள்ளார். இரவுடன் இந்த கல்வெட்டு அகற்றப்படலாம் என்று அ.தி.மு.கவினரே சொல்லி வந்தனர். கட்சி மாறினாலும் சிலை அமைக்க முயன்றவர் ரகுபதி தானே. அவர் பெயர் இருப்பதில் என்ன தப்பு என்று அ.தி.மு.க வில் இருக்கும் ரகுபதி விசுவாசிகள் பேசி வந்தனர்.

அது போனவாரம்... இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு எம்.ஜி.ஆர். சிலையின் கீழ் இருந்த ரகுபதி பெயரில் அமைக்கப்ட்ட கல்வெட்டை உடைத்து எரிந்துவிட்டனர். நான் மிகவும் சிரமப்பட்டு அமைத்த கல்வெட்டை இன்றைய அ.தி.மு.க மாவட்ட நிர்வாகம் கண்மூடித் தனமாக உடைத்துள்ளது.

கல்வெட்டை உடைத்தாலும் எம்.ஜி.ஆர். சிலை அமைப்பாளர் யார் என்றால் ரகுபதி என்று வரலாறு சொல்லும் அதை இவர்களால் அழிக்க முடியாது. இந்த சிலை கூட ஜெ.வின் பிறந்த நாளை முன்னிட்டு அமைத்தது என்பதைக் கூட இவர்கள் மறந்து ரகுபதி பெயர் இருக்கிறது என்பதற்காக மட்டுமே எடுத்துள்ளனர்.

 ஜெ வின் பிறந்த நாள் கல்வெட்டு அகற்றப்பட்ட செய்தி ஜெ. காதுக்கு போனால் அகற்றியவர்களின் கதி அதோகதி தான் என்பது இவர்களுக்கு தெரியவில்லை என்றார். கடந்த வாரமே நக்கீரன் இணையத்தில் சொன்னது போல நடந்துவிட்டது. இது இந்த வாரம்... - செம்பருத்தி

0 கருத்துக்கள் :