சில்வாவின் திருமணப் பேச்சால் நவிபிள்ளை கடும் கோபம் ; மன்னிப்புக் கோரியது சிறிலங்கா

31.8.13

தன்னைத் திருமணம் செய்ய விரும்புவதாக, சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக் குறித்து, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்திடம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக, சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா கூறியது தொடர்பான, காணொலிப் பதிவு, ஐ.நா அதிகாரிகளால் நவநீதம்பிள்ளையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  அதைப் பார்த்த அவர், கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் அவர் கடும் அதிருப்தியை வெளியிட்ட நிலையில், மேர்வின் சில்வாவின் கருத்துக்காக சிறிலங்கா அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை ஹில்டன் விடுதியில் நடந்த வரவேற்பு நிகழ்வில், மேர்வின் சில்வாவின் கருத்துக்காக சிறிலங்கா அரசின் சார்பாக சிறிலங்காவின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வருத்தம் தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையைத் திருமணம் செய்யத் தயார் என்று சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்டு கருத்து, சிறிலங்காவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :