அமெரிக்கா சர்வதேச அளவில் பயண எச்சரிக்கை

3.8.13

அமெரிக்கா உலக அளவில் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அல் கய்தா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆபிரிக்க நாடுகளிலும் அதிகளவில் அச்சுறுத்தல் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அல் கய்தா தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் கொன்சோல் காரியாலங்கள் மூடப்பட்டுள்ளன.
அல் கய்தா இயக்கமும் அதன் துணை நிறுவனங்களும் தாக்குதல் நடாத்த உத்தேசித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் தமது நாட்டுப் பிரஜைகள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பிரஜைகளை பாதுகாப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சி எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :