மன்னார் ஆயருக்கு நவி.பிள்ளை அழைப்பு

29.8.13


ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசேப்பு இன்று கொழும்பில் சந்தித்துப் பேசவுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐ.நா செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

வன்னி மற்றும் மன்னார் பிராந்தியத்தின் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக, கலந்துரையாடுவதற்கே, மன்னார் ஆயருக்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின் போது, அரசியல் கைதிகள், மீள்குடியேற்றம், காணாமற்போனோர் மற்றும் போருக்குப் பின்னர் உள்ள மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து, நவநீதம்பிள்ளையிடம் மன்னார் ஆயர் விபரித்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முள்ளிக்குளம் பிரதேசத்தில் மீள்குடியேற்றபட்ட 30 குடும்பங்களுக்கு கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் மன்னார் ஆயர், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :