பேஸ்புக் வழியாக மட்டக்களப்பில் விபச்சாரம்?

27.8.13

மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைய வழி விபச்சார நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள யுவதியொருவரின் பெயரில் புகைப்படங்களுடன் இணைய முகநூலில் (பேஸ்புக்)வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதியின் முகவரியுடன் வெளிவந்துள்ள இந்த தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பொது அமைப்புகளினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கலாசார சீரழிவுகள் அதிகரித்துள்ள நிலையில் இணையத்தளமும் இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்கள் பெரும் சீரழிவு நிலைக்கே இட்டுச்செல்லும் எனவும் பொது அமைப்புகளினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :