கூட்டமைப்பின் வேட்பாளர் மீதான தாக்குதலுக்கு ஈ.பி.டி.பி கண்டனம்

20.8.13

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இன்று கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்;ட சம்பவத்தை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபைத் தேர்தல், அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் எவர் ஈடுபட்டாலும் அது கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.

 சுதந்திரமாகவும், ஜனநாயக மரபுகளோடும் தேர்தல் நடக்க வேண்டுமென்பதையே ஈ.பி.டி.பி விரும்புகின்றது.
வடக்கு மாகாணத்தில் இதுவரை தேர்தல் முறைகேடுகள், வன்முறைகள் என்பன குறிப்பிடும் அளவில் பதிவு செய்யப்படவில்லை என்று கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இன்று நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கதாகும்.

அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கி வடமாகாண சபை தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே எமது கட்சியினது விருப்பாகும் என்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்

0 கருத்துக்கள் :