கிராண்ட்பாஸ் பள்ளிவாசலொன்றின் மீது தாக்குதல்

10.8.13

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்று இன்று மாலை குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளது.

அப்பள்ளிவாசலுக்கு எதிராக ஏற்கெனவே  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்ததை அடுத்து, அப்பள்ளிவாசலுக்கு பொலிஸ் காவல் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை  ஒரு குழுவினர் அப்பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

இதன்போது ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்துள்ளனர்.  இரு பொலிஸார் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பொலிஸாரும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :