சர்வதேச நிகழ்வில் இலங்கை அதிகாரிகளை உள்ளடக்க முடியாது: அமெரிக்கா அதிரடி

21.8.13


சர்வதேச இராணுவ நிகழ்வு ஒன்றில் இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகளை உள்ளடக்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது, நியூசிலாந்தின் ஓக்லாண்ட்டில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இராணுவ நிகழ்வில் இரண்டு இலங்கை உயர் இராணுவ அதிகாரிகளை உள்ளடக்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோருக்கு இவ்வாறு சந்தர்ப்பம் வழங்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி இராணுவ முகாமைத்துவ கருத்தரங்கொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், வன்னிக் கட்டளைத் தளபதி பொனிபஸ் பெர்னாண்டோவின் பரிந்துரையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும், குறித்த இரண்டு இராணுவ உயர் அதிகாரிகளை கருத்தரங்கில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறித்த இருவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் 57 படையணியைச் சேர்ந்தவர் எனவும், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க வன்னிப் போரில் பங்கேற்கவில்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :