தொல்லை கொடுத்த இலங்கை தமிழர் அதிரடி கைது

18.8.13

டொரண்டோ பேருந்தில் ஒன்றில் சென்ற பெண் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பித்து சென்ற 43 வயது மர்ம நபர் பொதுமக்களின் உதவியால் பிடிபட்டார்.

சென்ற ஜூலை மாதம் 24ஆம் தேதி, டொரண்டோவில் உள்ள TTC  17 Birchmount bus என்ற பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் ஒருவரை பிடிக்க உதவுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டிருந்தனர். குற்றவாளியின் புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டிருந்தனர்.
பொதுமக்களில் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று அந்த குற்றவாளியை டொரண்டோ போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். நேற்று வியாழக்கிழமை மாலை அந்த குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றவாளியின் பெயர் வி+++ரன் ++++ரன் என தெரியவந்துள்ளது. இவர் ஒரு இலங்கை தமிழர் என்பதும் தெரிய வந்துள்ளது

0 கருத்துக்கள் :