நவநீதம்பிள்ளையை நம்புகிறதாம் சிறிலங்கா

18.8.13

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் கூட்டத்தொடரில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நடுநிலையான - பாரபட்சமற்ற அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான தூதுவரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளையின் பயணத்தை சிறிலங்கா அரசாங்கம் சாதகமாக எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து 4 ஆண்டுகளின் பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகளின் முன்னேற்றத்தை நவநீதம்பிள்ளையினால் நேரில் காணமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான- நடுநிலையான அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டங்களில், நவநீதம்பிள்ளை தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், அவர் பக்கசார்பாகவும், பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :