யாழ்.இளவளையில் பெற்ற மகளை கற்பமாக்கிய தந்தை தலைமறைவு

14.8.13

தனது 16 வயது மகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு கற்பமாக்கிய தந்தையைத் தேடி யாழ்.பொலிஸார் வலைவிரித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.இளவாலை சீந்திப்பந்தல் பகுதியில் தாயர் இறந்த நிலையில் தந்தையுடன் ,வசித்து வந்த மகளை தொடர்சியாக பாலியல் உறவில் ஈடுபட வைத்து குறித்த மகளைக் கற்பமாக்கிய தந்தை தொடர்பில் சிறியதாயார் யாழ்.பொலிசில் கொடுத்த புகாரை அடுத்து தந்தை தேடப்பட்டு வருகின்றார். 16 வயது நிறம்பிய சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். பெற்ற மகளை கற்பமாக்கிய தந்தையார்
தலைமறைவாகியுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விரைவில் அவரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸார், குறித்த சிறுமியில் கற்பத்திற்கு தந்தையார் தான் காரணமா ? என்ற கோணத்தில் விசாரணைகளை முடுக்கியுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது

0 கருத்துக்கள் :