விஷ விதைத் தூள் கலந்த தண்ணீரை பருகிய மாணவிகள் ஆபத்தான நிலையில்

1.8.13

விஷ விதை தூள் கலந்திருந்த தண்ணீர் போத்தல்களில் இருந்த தண்ணீரை பருகிய மூன்று பாடசாலை மாணவிகள் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை சேருவில் ஸ்ரீ நவவோதயா பாடசாலையில் 7 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அதே வகுப்பில் பயிலும் மாணவர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :