பழ.நெடுமாறன் தலைமையில் சீமான் திருமணம்:8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)

4.8.13

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை அவர் மணக்கிறார். திருமணம் சென்னையில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

மணமகள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
சீமான் - கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்
தலைமை தாங்கி நடத்திவைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார்.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின்றனர். விழாவில், அரசியல் பிரமுகர்களும், திரை உலகத்தினரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

0 கருத்துக்கள் :