பிரான்ஸ் - 500 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட கோபுரம்

15.8.13

கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டிருந்த பரிஸ் கோபுரமொன்று தற்போது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத் திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிஸ் மத்திய பகுதியில் (சத்தலே லே ஹாலுக்கு அருகில்) நகரில் 16ம் நூற்றாண்டில் 1500ம் ஆண்டுகளில் Tour Saint-Jacques என்ற இக்கோபுரம் கட்டப்பட்டது. எனினும் சில நாட்களிலேயே இக்கோபுரம் மூடு விழாவும் கண்டது. 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியின் காரணமாக இங்கிருந்த தேவாலயம் சேதமடைந்தபோதும், இக்கோபுரத்திற்கு சேதாரம் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்பட்டது. எனினும், ஈபிள் கோபுரத்திற்கு இணையாக கருதப்பட்ட இக்கோபுரம், 500 வருடங்களுக்குப் பிறகு, தற்போது புனரமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 170 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் உச்சியை அடைவதற்கு 300 அழகிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பரிஸ் நகரத்தின் நடுவே அமையப்பட்டுள்ள இந்தக் கோபுரத்தின் உச்சியில் நின்றால், நகரின் அழகு மொத்தத்தையும் காணலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. வரும் செப்டெம்பர் 15ம் திகதி வரை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் இக்கோபுரத்தின் நுழைவு அனுமதிச்சீட்டின் விலை 6 ஈரோக்கள் மட்டுமே.

0 கருத்துக்கள் :