சவுதி அரேபியாவில் 46 பேரை பலி வாங்கிய மர்ம நோய்

11.8.13

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் வேகமாக பரவி வரும் மர்ம நோய்க்கு சவுதி அரேபியா, ஜோர்டன், கர்த்தார், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, துனிசியா ஆகியா நாடுகளில் இதுவரை 46 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்துச் சென்ற 'சார்ஸ்' கிருமிக்கு இணையான 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் இந்த மர்ம நோய் வருவதாக கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த கிருமியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது என்ற நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது சுமார் 50 பேர் மர்ம நோயிற்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து, சவுதி அரேபியாவிற்கு வரும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை சரிபாதியாக குறைத்து அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் 'மெர்ஸ்' மர்ம நோய் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் ஓமன் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின் மூலம் இந்நோய் பரவியிருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு ஆராய்ச்சியின் முதல் கட்டம் தான். நோய் கிருமியின் தன்மையைப் பற்றி முற்றிலுமாக அறிந்துக்கொண்ட பின்னரே நோயை தடுப்பதற்கான நுண்ணியிர் ஆய்வாளர் பெஞ்சமின் நியூமென் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :