25 இலட்சம் ரூபாய் கொள்ளையடித்தவனைக் காட்டிக் கொடுத்த பேஸ்புக்

6.8.13

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை நவி பகுதியை சேர்ந்தவர் தீபக் ரெளத்.
இவர் கப்பல் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவரது வீட்டில் வேலை செய்து வந்த 25 வயது இளைஞன் 25 லட்ச ரூபாய் பணத்தை லவட்டி கொண்டு தலைமறைவானார்.
நான்கு மாதங்களாக காவல்துறை எல்லா இடங்களிலும் சல்லடை போட்டு தேடியும் கண்டுபிடிக்க முடியாத அந்த இளைஞன் தானாகவே மாட்டி கொண்டான்.
தனது கட்டிலில் ஹாயாக படுத்திருப்பது போல் உள்ள பிகைப்படத்துடன் தனது முன்னாள் எஜமானருக்கு ஃப்ரெண்ட் ரிக்கவஸ்ட் கொடுத்துள்ளான் அந்த இளைஞன்.
அதன் பிறகும் சும்மா இருக்குமா காவல்துறை, அலாக்கா தூக்கி புலாக்கா உள்ளே போட்டுட்டாங்க.
ஐ.பி முகவரியை வைத்து திறமையாக கைது செய்திருக்கிறது காவல்துறை.
இப்போது அநியாயமா கம்பி எண்ணுகின்றான் அந்த கேடி பக்கிரி.

0 கருத்துக்கள் :