சுவிட்சர்லாந்தில் 1992 இலங்கையர்கள் அரசியல் புகலிடம் விடுத்துள்ளனர்!

10.8.13

1992 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் அகதிக் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அரசியல் புகலிடம் வழங்குமாறு குறித்த இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி வரையில் 20 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் புகலிடம் கோரியவர்களில் சிலர் கொழும்பிலிருந்து நேபாளம், இத்தாலி ஊடாக சுவிட்சர்லாந்தைச் சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் தமக்கு அரசாங்கம், இராணுவம் போன்ற தரப்பினரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகத் தெரிவித்து அரசியல் புகலிடம் கோரியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :