17 வயது வாலிபரை அடித்துக் கொன்ற 4 நண்பர்கள்

25.8.13

புதுடெல்லியில் உள்ள மயூர் விகார் பகுதியைச் சேர்ந்தவன் ரவி (17). கடந்த வியாழக்கிழமை நண்பர்களை சந்திப்பதற்காக வெளியே சென்ற இவன் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை.

 இதனால் தவித்துப்போன பெற்றோர் தனது மகனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.
அப்போது அதே பகுதியில் கைப்பற்றப்பட்ட ஒரு பிணத்தை காட்டி இது உங்களுடைய மகன் தானா ? என போலீசார் கேட்டனர்.

 பிணத்தின் முகத்தைப் பார்த்த பொற்றோர் துடித்துப்போனார்கள். ரவியை கொன்றவர்கள், முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு கல்லினால் முகத்தை நசுக்கி சேதப்படுத்தினர். அவனது உடலில் குத்து காயங்களும் இருந்தன.

அந்த காயங்கள் பீர் பாட்டிலை உடைத்து குத்தியதால் ஏற்பட்ட காயங்களாக இருக்கும் என கருதிய போலீசார், கிழக்கு டெல்லி மற்றும் மயூர் விகார் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் ரவியின் புகைப்படத்தைக் காட்டி இவரை இப்பகுதியில் யாராவது பார்த்தீர்களா ? என்று விசாரித்தனர்.

ஒரு மதுக்கடையில் வேலை செய்யும் நபர் மட்டும் நான்கு வாலிபர்களுடன் புகைப்படத்தில் உள்ள நபரை பார்த்ததாக கூறினார். அந்த 4 பேரின் அங்கஅடையாளங்களை கேட்டு தெரிந்து கொண்ட போலீசார், ரவியின் நண்பர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘கடந்த வியாழக்கிழமை நாங்கள் 5 பேரும் மதுக்கடைக்கு சென்றோம். போதையில் இருந்த எங்களுக்குள் பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பானது.

நாங்கள் நால்வரும் சேர்ந்து ரவியை பீர் பாட்டில்களால் குத்தி கொலை செய்தோம். அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை கல்லால் நசுக்கி மயூர் விகார் பகுதி உள்ள வணிக வளாகம் அருகே பிணத்தை வீசினோம்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.

குற்றவாளிகள் நால்வரையும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

0 கருத்துக்கள் :