ஆற்றுக்குள் பஸ் பாய்ந்து 16 பேர் பலி

21.8.13

இந்தோனேசியாவில் உள்ள தீவுகளில் ஒன்றான ஜாவாவின் மலைவாச தலங்களை சுற்றிப் பார்க்க சென்ற சுமார் 60 பேர் இன்று காலை தலைநகர் ஜாகர்தாவுக்கு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சிசாருவா என்ற இடத்தின் அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பஸ்சின் டிரைவர் சற்று ஓரமாக ஒதுக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நிலைதடுமாறிய பஸ், சாலையோரம் இருந்த உணவகத்தின் மீது மோதியும், வேகம் குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தது.

பக்கவாட்டில் இருந்த ஆற்றுக்குள் சுமார் 26 அடி உயரத்தில் இருந்து பஸ் சீறிப்பாய்ந்தது. இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர். இதர பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

காயமடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

0 கருத்துக்கள் :