ஆச்சி அப்பன் வாழ்ந்த நிலத்தில் ஆசிப்பட்சா சோமபட்சா

26.7.13


விடிவு வரும் என்று காத்திருந்தோம் -ஓர்
முடிவே இல்லாது வாழ்கின்றோம்!
போரை முடித்து விட்டோம்-என்று
புகளாரம் பாடும் அரசே!

புது வாழ்கை  அழிப்போம்-என்று
பொய் வார்த்தை கூறும் அரசே!
எங்கே அந்த புது வாழ்வு தமிழ் இனத்துக்கு?
ஆச்சி அப்பன் வாழ்ந்த நிலத்தில்
ஆசிப்பட்சா சோமபட்சா   நீ-

அதை கேட்டு அங்கே போனால் 
உந்தன் உயிர் போகுமப்பா
எங்கே அந்த புது வாழ்வு தமிழ் இனத்துக்கு?
நாம் இளைத்த தவறென்ன
கூறுங்கோ அரசுகளே!

நம் இனத்தில் தவறு காணும்
உலகம் வாழ் அரசுகளே
எங்கே போனது உங்கள் உலக நீதி
எங்கே போனது உங்கள் மனித நேயம்!
சுற்றும் உலகில் வாழும் மனிதர்போல்
சுதந்திரம் கேட்டது தவறா? அல்லது
பெட்டிப் பாம்பாய் நாம்

அடங்க வேண்டும் என்று நினைப்பா?
அரசுக்கு ஆள் பலம் கொடுத்து!
ஆயுதம் அள்ளிக் கொடுத்து !
எம் உறவுகளை அழித்தீர்கள்
ஏன் ? எதர்காக?
 
அரக்க குணம் படைத்த
அரசுக்கு துணைபோனதால்
அகில உலக அரசுகளே
நீங்கள் கண்ட வெற்றி என்ன?

வளம்சார் அரசியல் நகர்த்த
வணிகம் செய்ய
எம் இனம் பிணமானதே
உமக்கு தெரியாதா ?

போரின் வலுவை முடித்ததாய்
ஆடும் முட்டாள் களுடன் 
இணைந்து எம் இனத்தை சாகடித்து
எண்ணத்தைக் கண்டிர்கள்?
எமது சுதந்திரத் துக்காய்
என்ன வழி செய்தீர்கள் ?

 நாளை வரலாறு உலக சரித்திரத்தில்
காறி துப்பும் நிலையானதே உங்கள் செயல்!
காடையரின் அரசியலும்
கயவர்களில் பய முறுத்தும்
சீர்  அழிந்த வாழ்கை ஆனதர்க்கும்
நீங்கள் தானே காரனம்!
 
செங்களத்து வீரர் மீண்டும்
எம்களத்தை தோன்ற என்னிடும்
எம் நிலைக்கு இந்த அரசு தானே காரனம் ?
நாளை வரலாறு உலக சரித்திரத்தில்
காறி துப்பும் நிலையானதே உங்கள் செயல்!
 
தாகம் தணியாது  என்ற குரல் ஓயாது
தடைகள்  என்றும்
 எம்மை ஒன்றும் செய்யாது
போர் வீரன் நடந்த மண்ணை
பூர்வீகத் தாய்  மண்ணை
போ..என்று விட்டிடவும் முடியாது!

விடிவு வரும் என்று காத்திருந்தோம் -ஓர்
முடிவே இல்லாது வாழ்கின்றோம் ?
 ******ஈழக் கவி**********
 

0 கருத்துக்கள் :